BREAKING NEWS

திருவள்ளூர் அருகே வங்கியின் மேற்கூரையின் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து 3 பேர் காயமடைந்தனர்.

திருவள்ளூர் அருகே மப்பேடு அடுத்த புதுப்பட்டு பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் இன்று மதியம் வழக்கமாக வங்கிக்குள் வாடிக்கையாளர்கள் அமரும் இடத்தில் மேற்கூரையின் சிமெண்ட் பூச்சு யில் திடீரென பெயர்ந்து விழுந்தது.அப்போது வாடிக்கையாளர்கள் அமரும் இருக்கையில் அமர்ந்திருந்த காஞ்சிபுரம் மாவட்டம் சின்ன வளர்புரம் பகுதியை சேர்ந்த ஜோஸ்பின், வயலூர் கிராமத்தை சேர்ந்த பார்வதி, மப்பேடு கேகே நகர் பகுதியை சேர்ந்த மணி ஆகியோர் முதியோர் உதவித்தொகை வந்திருந்த போது, மேற்கூரையின் சிமெண்ட் பூச்சு அவர்கள் மீது விழுந்ததில் லேசான காயம் ஏற்பட்டு அலறியடித்து ஓடினர். இதனையடுத்து காயமடைந்த 3 பேரும் அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.பணி நேரத்தில் வாடிக்கையாளர்கள் அமர்ந்திருந்த இருக்கைகளுக்கு மேலே இருந்த மேற்கூரையின் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து காயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Share this…

CATEGORIES
TAGS