திருவாரூர் மாவட்டத்திலுள்ள 430 ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களிலும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
தமிழ் புதல்வன் திட்டத்தை நிறைவேற்றி பொதுமக்களின் நலன் மட்டும் அல்லாமல், மாணவர்களின் நலன் காக்கும் அரசாக செயல்படும் திராவிட மாடல் அரசுக்கு திருவாரூர் மாவட்டத்திலுள்ள 430 ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களிலும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.*
ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி இன்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 ஊராட்சிகளிலும் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்த கூட்டங்களில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை ஊராட்சி மன்ற தலைவரிடம் அளித்தனர். அதனை பெற்றுக் கொண்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூடிய விரைவில் பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தனர்.
மேலும் இந்த நிதியாண்டில் அந்தந்த கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், நிதி ஆதாரங்கள், வரி வசூல் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை எடுத்துரைக்கப்பட்டன. பின்னர் பொதுமக்களின் நலன் காக்கும் அரசாக செயல்பட்டு வரும் திராவிட மாடல் அரசு, தற்போது மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டமும், மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றி பொதுமக்களின் நலன் காக்கும் அரசாக மட்டும் செயல்படாமல் மாணவ மாணவிகளின் நலன் காக்கும் அரசாக செயல்பட்டு வரும் திராவிட மாடல அரசின் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 430 ஊராட்சிகளிலும் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.