திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி. புதுப்பாளையம் கிராமத்தில் இருளில் மூழ்கி கிடக்கும் 50 குடும்பங்கள் நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.புதுப்பாளையம் கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள புதிய காலனியில் சுமார் 50 வீடுகள் உள்ளன.இந்தப் பகுதியில் இந்தப் பகுதியில் சுமார் 15 ஆண்டுகளாக மின்சார வாரியம் மின் இணைப்பு வழங்காமல் அலட்சியம் காட்டுவதாகவும் இதனால் மண்ணெண்ணெய் விளக்கில் குடும்பம் நடத்தி வருகின்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள பள்ளி,கல்லூரிகளில் பயலும் மாணவர்கள் படிப்பதற்கு சிரமமாக உள்ளதாகவும் மேலும் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியாத விளையும் அரசு தேர்வில் வெற்றி பெற கடுமையான சூழ்நிலை உள்ளதாகவும் அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர்.இதுபோன்ற அவங்களை கூறி மின்சாரத்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே கல்வி பயிலும் மாணவர்களுக்கு இளைஞர்களுக்கும் உதவும் வகையில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.சம்பத் போர்க்கால அ அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் 50 குடும்பத்தினர்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.