திருவெறும்பூர் அருகே உள்ள என்.ஐ.டி கல்லூரியில் ரேக்கிங் குறித்த விழிப்புணர்வு திருவெறும்பூர் உட்கோட்ட காவல்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
திருச்சி மாவட்டம், ,
தமிழக அரசு கல்லூரி மற்றும் பள்ளிகளில் புதிதாக சேரும் மாணவர்களை பழைய மாணவர்கள் ரேக்கிங் செய்வதை தடுக்கும் வகையில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் ரேக்கிங் செய்தால் அது தண்டனைக்கு உரிய குற்றம் என்று எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் காவல் துறையினர் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ராக்கிங் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தியும், மாணவர்கள் தோழமையுடன் பழக வேண்டும் என்பதையும் அறிவுறுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள என்.ஐ.டி கல்லூரியில் திருவெறும்பூர் உட்கோட்ட காவல் நிலையம் சார்பில் நடந்த ரேக்கிங் குறித்த மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு முகாமிற்கு டிஎஸ்பி அறிவழகன் தலைமையில் கல்லூரியில் புதிதாக சேரும் மாணவர்களுடன் சீனியர் மாணவர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். மேலும் சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.
கல்லூரியில் உள்ள விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறையில் மாணவ, மாணவிகள் கவனம் செலுத்த வேண்டும், ராகிங் செய்வது சட்டப்படி குற்றம் அதற்கு தண்டனை வழங்க முடியும். அதனால் மாணவ மாணவிகள் சகோதரவத்துடன் பழக வேண்டும் என்று கூறினார்.
இந்நிகழ்வில் என்.ஐ.டி. கல்லூரி இயக்குனர் அகிலா கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளது எனவே என்.ஐ.டி கல்லூரி விழாக்களில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறினார்.
மாணவர்கள் நலன் தலைவர் குமரேசன் கல்லூரி மாணவ மாணவிகள் சகோதரத்துவத்துடன் ஒருவருக்கொருவர் பழக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த விழாவில் கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.