திருவேற்காடு தனியார் பள்ளியில் மாணவர்கள் ஒன்றிணைந்து வரைந்த சித்திர புனைவு கண்காட்சி.

திரும்பிய பகுதி எல்லாம் வண்ண வண்ண ஓவியங்கள் ஆர்வமுடன் கண்டு களித்த பெற்றோர்.
திருவேற்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் சித்திர புனைவு கலை கண்காட்சி நடைபெற்றது மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் 1 ம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலக் கூடிய மாணவர்கள் அவர்களின் சொந்த திறமையை வெளி கொனரும் வகையில் ஓவியங்கள், கை வினை பொருட்கள் வண்ணம் தீட்டுதல், மண்பாண்ட பொருட்களை செய்தல் என பல்வேறு கலை பொருட்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக இந்த கண்காட்சியில் 3000 கலை படைப்புகள் 250 வேலைப்பாடுடன் கூடிய பீங்கான் பொருட்கள், 100 க்கும் மேற்பட்ட காட்சி படைப்புகள், நூற்றுக்கும் மேற்பட்ட ஜவுளி காட்சிகள் என பல்வேறு கலை பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த கண்காட்சியில் சிறப்பு விருந்தினர்களாக புகழ்பெற்ற கலைஞர் அனாமிகா மற்றும் நுன் சேகரிப்பு தளமான ராஜகோபாலன் தோட்டா தரணி ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்து பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த ஓவியங்களை ஆர்வத்துடன் பார்த்தனர்.
மேலும் அதனை எவ்வாறு செய்தனர் என்பது குறித்தும் அதில் உள்ள விளக்கங்களையும் கேட்டறிந்தனர் பள்ளி வளாகத்தில் உள்ள மாணவர்கள் செய்திருந்த ஓவியங்களும் கலை பொருட்களும் நெசவுப் பொருட்களும் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் மாணவர்களின் பெற்றோர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்து புகைப்படங்களை எடுத்துச் சென்றனர்.