திருவேற்காட்டில் பூவ மாற்றி மேலே உள்ள குடியிருப்புகளை அகற்ற நோட்டீஸ் ஒட்ட வந்ததால் பரபரப்பு சாலை மறியல் ஈடுபட்ட பெண்கள் மற்றும் ஆண்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி சென்றனர்.

திருவேற்காடு கூவம் ஆற்றின் மேற்பகுதியில் 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில் கூவம் ஆற்றை ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கணக்கெடுத்து விட்டு சென்றனர்.
இன்றைய தினம் கணக்கெடுத்த வீடுகளில் நோட்டீஸ் ஓட்டுவதற்காக அதிகாரிகள் வந்த நிலையில் எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் திருவேற்காட்டில் அமர்ந்து சாலை மறியல் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த திருவேற்காடு போலீசார் சாலை மறியல் ஈடுபட்ட பெண்கள் மற்றும் ஆண்களை குண்டு கட்டாக தூக்கிச் சென்றனர்.
இதனால் போலீசா இருக்கும் பொது மக்களும் வெளியே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.