தீபம் மருத்துவமனை சாந்தி நகர்நலசங்கம் இணைந்து மக்களை தேடி இலவச சிறப்பு பொது மருத்துவ முகாம்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், தீபம் மருத்துவமனை மற்றும் சாந்தி நகர் நலசங்கம் இணைந்து மக்களை தேடி இலவச சிறப்பு பொது மருத்துவ முகாம் நகர் வளாகத்தில் நடைபெற்றது.
முகாமினை சாந்தி நகர் நலச்சங்கம் செயலாளர் ரமேஷ் பாபு தலைமை தாங்கினார். தீபம் நிர்வாக இயக்குனர் பேராசிரியர் நஜீபுதீன், நகர நல இணை செயலாளர் சிராஜுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் பொது மருத்துவப் பிரச்சனைகளுக்கான மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. பெண்களைப் பரிசோதிப்பதற்கென பெண் மருத்துவர்கள் குழு டாக்டர் மஞ்சு தலைமையில் பிரத்யேகமாக முகாமில் கலந்துகொண்டு தங்கள் பங்களிப்பை வழங்கினர்.
40 வயதிற்கு மேற்பட்ட அனைத்து ஆண்-பெண் இருபாலருக்கும் ரத்த அழுத்தம், பரிசோதிக்கப்பட்டது. மேல் சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு மருத்துவமனைக்கு உரியமுறையில் பரிந்துரைக்கப்பட்டது.
பொது மருத்துவ சிகிச்சைகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
முகாமில் சாந்தி நகர் நல வாசிகள், தீபம் நிர்வாக அலுவலர் சரவணன், மருத்துவமனை அலுவலர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.