தூத்துக்குடி சார் பதிவாளர் மோகன் தாஸ் அதிரடி பணிநீக்கம்!
தூத்துக்குடி சார் பதிவாளர் மோகன் தாஸ் அதிரடி பணிநீக்கம்!
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பத்திரப்பதிவு அலுவலக சார் பதிவாளர் மோகன் தாஸ் இன்று தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட தெற்கு சிலுக்கபட்டி, வடக்கு சிலுக்கன்பட்டி ஆகிய கிராமத்தில் வீட்டு மனை மற்றும் விவசாய நிலம் சுமார் 2,500 ஏக்கர் தனிநபருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்த நிலையில், நேற்று தெற்கு சிலுக்கன்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பாஜக மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து, இச்சம்பவத்தை அறிந்த பத்திர பதிவு அதிகாரிகள் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் தவறு நடந்திருப்பது கண்டறியப்பட்டதை கண்டு புதுக்கோட்டை சார்பதிவாளர் மோகன்தாஸ் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். மற்றும் தனிநபருக்கு 2,200 ஏக்கர் பவர் பதிவு செய்ததை செல்லாது என்று ஆணை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் புதுக்கோட்டை புதிய சார்பதிவாளர் பணிக்கு புதிதாக நியமிக்கப்படுவார் என தெரிகிறது.
இது குறித்து நடேச பெருமாள் கூறுகையில், தெற்கு, வடக்கு சிலுக்கன்பட்டி கிராமத்தில் 600 வீடுகள் என 2500 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் ஆவணம் அனைத்தும் மக்களாகிய எங்களிடத்தில் உள்ளது. ஆனால் சார்பதிவாளர் எங்கள் நிலத்தை கோயம்புத்தூரை சேர்ந்த செந்தில் என்பவருக்கு போலி பத்திரப்பதிவு செய்துள்ளார். எனவே இன்று மாலைக்குள் எங்களிடம் நிலம் வரவில்லை என்றால் மிக பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என கூறினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.