BREAKING NEWS

தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு உத்தரவுபடி, எதிர்பாராத வகையில் நடைபெறும் பல்வேறு சம்பவங்களில் அரசு மருத்துவமணையில் சிகிக்சை பெறுபவர்களுக்கு அவசர தேவைக்கு ரத்தம் தேவைப்படுவதால், அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரத்த தான முகாம் நடைபெற்றது. முகாமை வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம் தொடங்கி வைத்தார்.

இதில் வேலவன் ஹைபர்மார்க்கெட் உரிமையாளர் மகாராஜன், சாயர்புரம் போப் கல்லூரி உதவி பேராசிரியர் கனகராஜ் மற்றும் போப் கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள், பத்திரிகையாளர்கள், வாகன ஒட்டுநர்கள், பயிற்சியாளர்கள் உள்பட பலர் ரத்ததானம் செய்தனர்.

வட்டார போக்குவரத்து அலுவலக ஆய்வாளர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS