BREAKING NEWS

தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பேரணி.

தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பேரணி.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் என்னும் நிகழ்ச்சியின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பொறுப்பு பொன்னுசாமி அவர்கள் தலைமை வகித்தார்கள் நிகழ்ச்சி சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி மாநகராட்சி உதவி ஆணையாளர் திரு வெங்கட்ராமன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.

 

திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் திரு சுப்பிரமணியன் அவர்கள் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுகாதார அலுவலர் முருகேசன், சுகாதார ஆய்வாளர் பாலசுப்ரமணியன் மற்றும் சுகாதார பணியாளர்கள் செய்திருந்தனர் நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள் திரு ஷாம் நியூட்டன் மற்றும் அங்கு ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )