BREAKING NEWS

தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வுடன் பணியாற்றுங்கள் வளம் மீட்பு பூங்காவில் செயல் அலுவலர் ஆய்வில் பேச்சு.

தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வுடன் பணியாற்றுங்கள் வளம் மீட்பு பூங்காவில் செயல் அலுவலர் ஆய்வில் பேச்சு.

கலவை தூய்மையான பேரூராட்சியினை உருவாக்குவதற்கு தூய்மை பணியாளர்களுக்கு விழிப்புணர்வு..

 

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேரூராட்சியில் 15 வார்டுகளில் உள்ள மக்கும் குப்பை மக்காத குப்பைகளை வாழைப்பந்தல் சாலையில் உள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் உள்ள வளம் மீட்பு பூங்காவிற்கு எடுத்துச் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் கலவை பேரூராட்சி செயல் அலுவலர் பொறுப்பு சரவணன், திடீரென இன்று வாழைப்பந்தல் சாலையில் உள்ள வளம் மீட்பு பூங்காவில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பேராச்சி பரப்புரையாளர் குமுதா மற்றும் லதா ஆகியோரிடம் இயற்கை உரம் தயாரித்தல், பிளாஸ்டிக் மறுசுழற்சி பணிகள் ஆகியவை குறித்தும் கேட்டறிந்தார்.

 

பின்னர் குப்பை கிடங்கு பார்வையிட்டு மற்றும் குப்பை மக்காத குப்பை வகைகளை தரம் பிரிக்கும் பணியினை பார்வையிட்டு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும், மேலும், சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத வகையில் மங்காத குப்பைகளை பயன்படுத்த வேண்டும், குப்பைகளை வகை பிரித்து. தூய்மையான பேரூராட்சியினை உருவாக்குவதற்கு தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

 

இந்த ஆய்வில் தூய்மை பணியில் மேற்பார்வையாளர் பொறுப்பு அரங்கநாதன், மற்றும் தூய்மை பணியாளர்கள், பரப்புரையாளர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர். அதைத் தொடர்ந்து பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று கட்டுமானப் பணிகளை பார்வையட்டு, வீடுகளை விரைவாக கட்டி முடிக்க வேண்டும் என்று அறிவுரைத்தனர்.

CATEGORIES
TAGS