தென்காசி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி பங்கேற்பு!
செங்கோட்டை அருகே உள்ள வடகரையில் SDPI கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி: தென்காசி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி பங்கேற்பு!
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள வடகரை சேனைத்தலைவர் திருமண மண்டபத்தில் SDPI கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு SDPI கட்சி நகர தலைவர் பாசித் தலைமை தாங்கினார். SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சுல்பிகர் அலி, மாவட்ட தலைவர் சிக்கந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும், தென்காசி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரும், புதிய தமிழகம் கட்சி தலைவருமான டாக்டர். கிருஷ்ணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.