தேசிய சட்டப் பணி ஆணையம் மாநில சட்டப்பணி ஆணையக் குழு கரூர் மாவட்ட சட்டப்பணி ஆணையக் குழு சார்பில் .கரூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது
கரூரில் நான்கு அமர்வுகளும் குளித்தலையில் ஒரு அமர்வும் அரவக்குறிச்சி கிருஷ்ணராயபுரம் தலாஆகியவற்றில் தலா ஒன்றும் ஆக மொத்தம் ஏழு அமர்வு மக்கள் நீதிமன்றத்தில் வழக்காடிகளுக்கு உள்ள சமரசமாக பேசி பேசிக்கொள்ள இந்த மக்கள் நீதிமன்றத்தில் இடையே உள்ள வழக்குகளை சமரசமாக பேசி தீர்வு கொள்வதற்காக இன்று நடைபெற்றது.
கரூர் மாவட்டத்தில் உள்ள மொத்த நிலுவையில் உள்ள 21969 வழக்குகளில் 198 வழக்குகள் சமரசம் செய்யக்கூடிய வழக்கில் என அடையாளம் காணப்பட்டு மக்கள் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அதில் இதுவரை ஐந்து வழக்குகள் சமரசம் ஏற்பட்டு இதில் 19 லட்சத்து 5000 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
மேலும் இதைத் தவிர நீதிமன்றத்திற்கு வழக்கு வருவதற்கு முன்னர் உள்ள வழக்கு 69 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் 33 வழக்குகள் தீர்வு ஏற்பட்டு ரூபாய் 33 லட்சத்து 47 ஆயிரத்து 32 தீர்வு காணப்பட்டுள்ளது.
மேலும் இன்றைய மக்கள் நீதிமன்றத்திற்கு முன்னேற்பாடு நடவடிக்கைகளாக 03/06/ 2024 முதல்7/06/2024 மாவட்ட நீதிமன்றத்தில் தினமும் முந்தைய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு மக்கள் நீதிமன்றம் சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றது.
மக்களின் அதிகமான வழக்குகள் நிரந்தரமாக தீர்வு காண்பதற்கும் வழக்கில் செலவு குறைகளை நீதிமன்ற முத்திரை கட்டணங்களை திரும்ப பெறுவதற்கு போன்ற வழிமுறைகளை பயன்படுத்திக்கொள்ள இந்த மக்கள் நீதிமன்றத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட முதன்மை நீதிபதி தெரிவித்தார்.
மேலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது அதில் இந்த மாவட்டத்தில் 1493 வழக்குகள் சமரசத்திற்காக எடுத்துக் கொள்ளப்பட்டு 15 கோடி 75 லட்சத்து 90 ஆயிரத்து 988 மதிப்பிலான தீர்வு காணப்பட்டுள்ளது என மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.