தேசிய ஜனநாயக கூட்டணியின் கரூர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் தேர்தல் பரப்புரை
கரூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி புலியூரில் தேசிய ஜனநாயக கூட்டணி பாஜக வேட்பாளர் வி வி செந்தில்நாதனை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.
இந்த கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொது மக்களாகிய நீங்கள் நின்று கொண்டிருப்பது வெற்றி உறுதி செய்யப்படுகிறது. மேலும் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் மகளிர்களுக்கு 319 ரூபாய் உயர்த்தியுள்ளார். அதனை திமுக அரசு குறைத்துக் கொடுத்தால் அவர்களிடம் பொது மக்களாகிய நீங்கள் கேள்வி எழுப்புங்கள் என்றார் அவர்
மேலும் இந்த கரூரினுடைய தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி டெல்லியில் இருப்பார் சென்னையில் இருப்பார் மற்ற மாநிலங்களில் கட்சி பணி செய்ய சென்று விடுவார். ஆனால் அவருக்கு வாக்களித்த உங்களை ஜோதிமணி கண்டுகொள்ள மாட்டார் எனவும் ஆனால் நம்முடைய பாஜக வேட்பாளர் தாமரை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றால் இந்தத் தொகுதிகளிலேயே இருந்து மக்கள் பணியாற்றுவார் கரூர் பாராளுமன்ற தொகுதியை பொருத்தவரையில் பொதுமக்கள் பிரச்சனைகள் ஏராளமாக உள்ளது
அதனை ஆளும் அரசு திமுகவும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸும் மக்களின் வரிப்பணத்தை ஏமாற்றி சுரண்டகின்றனர் ஆனால் வாக்களித்த மக்களுக்கு ஏதும் செய்வதில்லை மேலும் இந்த தொகுதியில் மக்கள் பிரச்சனையை சொல்ல வேண்டுமென்றால் அடுக்கிக் கொண்டே போகலாம் அதில் குறிப்பாக ஒரு நான்கை மட்டும் உங்களிடத்திலே நான் கூறுகிறேன் ஒன்று கரூர் மேலப்பாளையம் அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் மேம்பாலம் மற்றும் கோயம்பள்ளி மேலப்பாளையம் இடையிலான மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு இணைப்புச் சாலை இல்லாமல் கடந்த 7 ஆண்டு காலமாக மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது
அதனை உடனடியாக தமிழக அரசு கொண்டுவர வேண்டுமென்றால் அரசு உடனே திறந்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றார்
மேலும் தொடர்ந்து பேசிய ஜி கே வாசன் தமிழகத்தில் தலைவருத்தாடுகிறது கஞ்சா போதை வருகிறது இளைஞர்கள் மத்தியில் போதைப் பழக்கம் அதிக அளவு பரவி வருகிறது இதனால் திருட்டு செயின் பறிப்பு கஞ்சா போன்ற சம்பவங்கள் அதிகளவு அரங்கேறி வருகிறது இதனை தடுக்க தமிழக அரசு மெத்தனமாக செயல்பட்டு வருகிறது என குற்றம் சாட்டினர்
இந்தத் தேர்தல் பரப்புரையில் பாஜக பாமக தாமாக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.