தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் கரிம்பேடு திருக்கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் கே பாலு அவர்கள் திருத்தணி தொகுதிக்கு பள்ளிப்பட்டு ஒன்றியம் கரிம்பேடு திருக்கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து நெடியம், கொளத்தூர், பள்ளிப்பட்டு, ஐ வி பேட்டை ,வெளியகரம், வெங்கட்ராஜபுரம், குமாராஜி பேட்டை உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் இதில் மாநிலத் துணைத் தலைவர் மருத்துவர் வைத்தியலிங்கம் வேட்பாளர் ஆதரித்து பொது மக்களிடையே வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர் பாமர மக்களை மதுவுக்கு அடிமையாக்கி சாராய தொழிற்சாலை அதிபருக்கு உங்கள் ஓட்டா? இல்லை ஒரு சொட்டு மது கூட இருக்கக் கூடாது என போராடும் வழக்கறிஞர் பாலு அவர்களுக்காக ? என்ன கேள்வி எழுப்பினார்.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், அரக்கோணம் தொகுதியை வளர்ச்சி பணிக்கு கொண்டு பாலு முயற்சி செய்வார். பள்ளிப்பட்டு பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுப்பார் எனக்கு ஒரு மாம்பழத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது பொதுமக்கள் கிராமங்கள் தோறும் கற்பூர ஆரத்தி எடுத்தும் மலர் தூவியம் பட்டாசு வெடித்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதில் பாமக மாவட்ட தலைவர் விஜயன். ராணிப்பேட்டை மாவட்டம் ஆமாம் முக செயலாளர் என் ஜி பார்த்திபன். மற்றும் நகர செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள் கிளைச் செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.