BREAKING NEWS

தேனி பாராளுமன்ற தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தேனி பாராளுமன்ற தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வன்  போட்டியிடுகிறார் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக நின்று தோற்றுப் போனதால் நொந்து போய் உள்ளேன் தயவு செய்து இம்முறை வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என தேனி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் வாக்கு சேகரிப்பு

தேனி பாராளுமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இதனை அடுத்து அவர் தீவிர பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி இன்று போடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தேனி மாவட்டம் புலிக்குத்தி அய்யம்பட்டி மார்க்கையன்கோட்டை எல்லப்பட்டி குச்சனூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பொதுமக்கள் மத்தியில் திறந்த வெளி வாகனத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தங்க தமிழ்ச்செல்வன் பேசுகையில் கடந்த முறை போடி சட்டமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றேன்.

இதனால் மிகவும் நொந்து போய் உள்ளேன். எனவே இந்த முறையாவது ஏமாற்றம் செய்யாமல் எனக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

CATEGORIES
TAGS