தேனி பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தனது வாக்கினை பதிவு செய்தார்
இன்று தமிழக முழுவதும் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது இதற்காக தேர்தல் ஆணையத்தின் மூலம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு காலை 7:00 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது
இதனை அடுத்து நடைபெற்று வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தேனி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இதனை அடுத்து இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருவதால் தனது வாக்கினை சொந்த ஊரான கம்பம் அருகே உள்ள நாராயண தேவன் பட்டியில் உள்ள அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
தங்க தமிழ்ச்செல்வன் வாக்குப்பதிவு செய்வதற்கு முன்பாக சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக வாக்குப்பதிவு செய்யும் இயந்திரம் வேலை செய்யவில்லை.
ஏழு மணிக்கு துவங்க வேண்டிய வாக்குப்பதிவு 7.20 மணிக்கு மேல் துவங்கியது அதிகாரிகள் வந்து இயந்திரத்தை சரி செய்த பின்பு அந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெற்றது