தேனி மக்களவை தேர்தல் வாக்கு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் கம்மவர் கல்லூரி வளாகத்திற்கு டூவீலரில் நுழைந்த இளைஞர்.
தேனி மக்களவை தேர்தல் வாக்கு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் கம்மவர் கல்லூரி வளாகத்திற்கு டூவீலரில் நுழைந்த இளைஞர். மாவட்ட ஆட்சியர் பார்வையிட வந்த பொழுது சிக்கிய இளைஞர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை.
தேனி மக்களவைத் தேர்தல் முடிவடைந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரி ஸ்டாங்ரூமில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. காவல்துறையினரின் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்ட நிலையில் கம்மவார் கல்லூரி வளாகம் பொதுமக்கள் நடமாடுவதற்கு தடை செய்த பகுதியாக அறிவிக்கப்பட்டு சிசிடிவி கேமராக்களுடன் பலத்த பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று கல்லூரி கேண்டினில் வேலை செய்வதாக கூறி சிப்பால கோட்டையைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் என்ற இளைஞர் கல்லூரி வளாகத்திற்குள் தனது இருசக்கர வாகனத்துடன் முகப்பு வாசலில் அனுமதி பெற்று உள்ளே நுழைந்துள்ளார். கல்லூரி கேண்டில் வேலை செய்பவர் தானே என்று அனுமதித்த காவல்துறையினர் சந்தேகம் ஏற்படவே அவர் வாகனத்தை நிறுத்த சொல்லி அவரைப் பின் தொடர்ந்து உள்ளனர் அப்பொழுது மாவட்ட ஆட்சியர் சாஜீவனா அப்பகுதியில் ரோந்து சென்றிருந்தார் .
அவரை காவலர்கள் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்ட போது அவர் தற்போது அங்கு பணியில் இல்லை என்பது தெரிய வந்தது மேலும் அவர் மது போதையில் இருந்தது தெரிய வந்தது. இதனைக் கண்ட மாவட்ட ஆட்சியர் இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யுங்கள் என உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து பிசி பட்டி காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.விசாரணையில் அவர் கம்மவார் கல்லூரியில் முன்னாள் ஊழியர் என்பதும் அங்கு வேலை செய்யும் நபர்களை பார்ப்பதற்காக மது போதையில் முயற்சி செய்தது தெரிய வந்தது.
உடன் வேலை செய்பவர்களை பார்ப்பதற்காக தடை செய்யப்பட்ட பகுதி கூட தாண்டி செய்ய செல்லலாம் என்ற இந்த இளைஞரின் முயற்சி தேனி மாவட்ட தேர்தல் பாதுகாப்பு படையினரின் அலட்சியத்தை வெளிப்படுத்தி உள்ளது.முதல் கேட்டில் நுழைந்த நபர் இரண்டாம் கேட்டில் மாட்டி தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.