தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா ஆண்டிபட்டி மலைக் கிராமங்களில் பிரச்சாரம்.
தேனி மக்களவை தொகுதியில் அமமுக சார்பாக போட்டியிடும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது பரப்புரையை ஆண்டிபட்டி பகுதியில் முதல்கட்டமாக செய்துள்ள நிலையில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்காக சென்றுள்ளார்.
இந்நிலையில் ஆண்டிபட்டி அருகே கடமலைமயிலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா பல்வேறு பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
மாலை முதல் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கணேசபுரம் வேலாயுதபுரம் எட்டப்பராஜபுரம் மேலப்பட்டி ,நேருஜிநகர், தொப்பையாபுரம்உள்ளிட்ட பல்வேறு மலைக் கிராம பகுதிகளில் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
பிரச்சாரத்தின் போது டிடிவி தினகரன் மனைவி பேசுகையில் முன்பு 10 வருடங்கள் இங்கே உங்களோடு இருந்தார் . என்னோடும் என் குழந்தையோடும் இருந்ததை விட தேனியில் தான் அதிகம் இருந்தார்சென்னைக்கு வர மாட்டார் . நானும் என் குழந்தையும் இங்கு வந்து பார்த்துவிட்டு செல்வோம்.அவர் அரசியலுக்கு வர காரணம் நீங்கள் தான் . மிகப்பெரிய வெற்றியை தேனி தொகுதியில் கொடுத்தீர்கள் .
ஓட்டு போடும் மிசினில் குக்கர் சின்னத்திற்கான சுவிட்சே தேய்ந்து போக வேண்டும்ஒவ்வொரு ஓட்டும் முக்கியமான ஓட்டு வளர்ச்சிக்கான ஓட்டு இங்கே வரமுடியாத பெரியவர்களிடம் சொல்லி குக்கர் சின்னத்தில் ஓட்டு போட சொல்லுங்க.
உங்களது ஒவ்வொரு ஓட்டும் தேனித்தொகுதி வளர்ச்சிக்கானது தமிழகத்திலேயே அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் நீங்கள் ஜெயிக்க வைக்க வேண்டும் 14 வருடங்களுக்கு பிறகு உங்களைத் தேடி வந்துள்ளார் அவரை வெற்றி பெறச் செய்யுங்கள்