தேனி மாவட்டம் கம்பத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா சந்தை வளாகத்தினை முதலமைச்சர் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார் .
இன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் மூலமாக நடைபெற்று முடிவடைந்த திட்டங்களை தமிழக முதலமைச்சர் இன்று துவக்கி வைத்தார்.
இதன் ஒரு நிகழ்வாக தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட கம்பம் வாரச்சந்தை கலைஞர் நூற்றாண்டு விழா இன்று தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி தமிழக கேரளா எல்லையை ஒட்டியுள்ள பகுதியாக அமைந்துள்ளது. கம்பம் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் வாரச்சந்தை அமைக்கப்பட்டு ஏராளமான பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வார சந்தையினை நவீன மயமாக்கும் திட்டத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டு
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 7.75 கோடி மதிப்பீட்டில் நவீன வசதியுடன் கூடிய கம்பம் வாரச்சந்தை வளாகம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்காக தயார் நிலையில் இருந்தது.
இதனை அடுத்து இன்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் கம்பம் வாரச்சந்தை வளாகத்தினையும், அவர்திறந்து வைத்தார்.
நிகழ்வில் கம்பம் நகர மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் வாரச்சந்தை வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்தனர்.
இந்த நிகழ்ச்சிகளில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் எம் எல் ஏ கலந்துகொண்டு சிறப்பித்தார். மேலும் நகர் மன்ற தலைவர், நகர்மன்ற துணைத் தலைவர், நகர் மன்ற உறுப்பினர்கள், கம்பம் நகராட்சி ஆணையர்,அரசு துறை அதிகாரிகள், பொதுமக்கள், திமுக கட்சியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.