BREAKING NEWS

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சின்ன ஓமலாபுரத்தில் திராட்சை விவசாயிகள் கலந்தாய்வுக் கூட்டம் தனியார் ஒயின் தொழிற்சாலையில் நடைபெற்றது.

இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு உத்தமபாளையம் சுற்றுவட்டார பகுதிகளான கம்பம் ,புதுப்பட்டி ,சின்ன ஓவுலாபுரம் ,கோகிலாபுரம், ஆனைமலையன்பட்டி, ராயப்பன்பட்டி முத்தலாபுரம் சின்னமனூர், ஓடைப்பட்டி, காமாட்சிபுரம் பகுதியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட திராட்சை விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர்.

விவசாயிகள் கூறும் பொழுது தேனி மாவட்டத்திலேயே சின்ன ஓவலாபுரம் பகுதியில் மட்டுமே ஒயின் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

விவசாயிகளிடம் கொள்முதல் செய்யக்கூடிய திராட்சை பழங்களுக்கு நல்ல விலை நிர்ணயிக்க வேண்டும் எனவும் தாங்கள் தரக்கூடிய காசோலை (செக்) ஆனது எளிதில் மாற்றிவிட சூழல் எங்களுக்கு தர வேண்டும் எனவும் நான்கு மாதம் ஆறு மாதம் வரை அலைக்கழிக்காமல் உடனடியாக எங்களுக்கு பணத்தை திருப்பி தர வேண்டும் எனவும் திராட்சை பழங்களை வெட்டி வண்டிகளில் ஏற்றி வர கூடிய செலவுகளை குறைக்க வேண்டும் எனவும் திராட்சை பழங்களுக்கு எப்பொழுது மாறாத விலை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வைத்தனர்

இந்த ஒயின் தொழிற்சாலையில் தயாரிக்க கூடிய ஒயின் ஆனது அரசு மதுபான கடைகள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது
இன்றைய விவசாயிகள் கலந்தாய்வு குறை கேட்பு கூட்டத்தில் ஒயின் தொழிற்சாலை நிர்வாகம் திராட்சை விவசாயிகளிடமிருந்து நேரடியாக திராட்சை பழங்களை கொள்முதல் செய்வதாக வாக்குறுதி அளித்தனர்.

இந்த விவசாயிகள் குறைக்கட்பு கலந்தாய்வு கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS