தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் தப்பி ஓடிய குற்றவாளிகளை தேடி வரும் காவல்துறையினர்
தமிழக முழுவதும் புகையிலைப் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் தடுப்பதற்காக தமிழக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது
அதன்படி தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சுருளிப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது அதன் பெயரில் நேற்று நள்ளிரவு வேளையில் தனிப்படையினர் சுருளிப்பட்டி பகுதியில் உள்ள கானா விளக்கு என்னும் இடத்தில் தனியார்க்கு சொந்தமான தோட்டத்துக் கட்டிடம் ஒன்றில் சோதனை மேற்கொண்டனர் அப்போது அங்கு சட்ட விரோதமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கணேஷ் கூலி போன்ற புகையிலை பொருட்கள் சுமார் 200 கிலோ பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது இதனை அடுத்து அந்தப் புகையிலைப் பொருட்களை தனிப்படை காவல்துறையினர் பறிமுதல் செய்து ராயப்பன்பட்டி காவல்துறையினிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து ராயப்பன்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.