தேனி மாவட்டம் கம்பம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் கடை அடைப்பை தொடங்கியுள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் புதிய பேருந்து நிலையத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இந்தக் கடைகளில் உரிமையாளர்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் தொடர் கடையடைப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த எட்டு மாதத்துக்கு முன்பும் மற்றும் நேற்றும் நகராட்சியில் அரசு அதிகாரிகளுடன் கடையின் உரிமையாளர்கள் பேச்சுவார்த்தையில் நடத்தி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து இன்று முதல் கடையின் உரிமையாளர்கள் காலவரையற்ற கடைப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
ஐந்து அம்ச கோரிக்கைகள்.
1. பேருந்துகளின் வழித்தடத்தை மாற்றி அனைத்து பொதுமக்களும் பேருந்து நிலையத்திற்குள் வந்து பேருந்து ஏற வேண்டும்.
2. கடைகளுக்கு நகராட்சி மூலம் வசூலிக்கப்படும் வாடகையை குறைக்க வேண்டும்.
3. பேருந்து நிலையம் அருகே உள்ள மதுக்கடைகளை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும்.
4. சுத்தமான இலவச கழிப்பிடங்கள் வேண்டும்.
5. 24 மணி நேரமும் தூய்மையான குடிநீர் வேண்டும்.
மேலும் நகர் மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையர் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் நடைபெறும் என்ன கூறினார்.