BREAKING NEWS

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே மேல சொக்கநாதபுரம் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள் திருடி தஞ்சாவூர் கொண்டு சென்று கும்பல் கைது

வெவ்வேறு ஊர்களிலிருந்து ஒன்று சேர்ந்து ஆட்டோ திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வந்த 5 நபர்களை அதிரடியாக கைது செய்த சிறப்பு குற்ற தடுப்பு பிரிவு காவல் துறையினர்.

திருட்டு ஆட்டோவை வாங்கி வர்ணம் மற்றும்பெயர் மாற்றி வெளியூரில் ஓட்டி வந்த தஞ்சாவூர் நபரும் கைது செய்யப்பட்டார்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே அமைந்துள்ளது மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி ..

இப்பகுதியில் வினோபாஜி தெருவில் வசித்து வருபவர் பார்த்தசாரதி ஆட்டு இறைச்சி கடை வைத்து தொழில் நடத்தி வரும்இவர் தனது சொந்த உபயோகத்திற்காக கேரளாவில் இருந்து ஆட்டோ ஒன்றை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார்.

இவர் கடந்த மாதம் 26 ஆம் தேதி தனது வீட்டிற்கு அருகில் உள்ள திருமண வட்டம் அருகே ஆட்டோ நிறுத்தி வைத்து விட்டு மறுநாள் காலை அங்கு சென்றபோது நிறுத்தி வைக்கப்பட்ட இடத்தில் ஆட்டோ இல்லாததை கண்டு அப்பகுதி முழுவதும் தேடி உள்ளார்.

ஆனாலும் ஆட்டோ கிடைக்காத நிலையில் திருடு போனதை உணர்ந்து உடனடியாக போடிநாயக்கனூர் ஊரக காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் இதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரும் தனது விவசாய பணிகளுக்காக கேரளாவில் இருந்து ஆட்டோ ஒன்று வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார்

கடந்த 11. 3.2024 அன்று இரவு பிரகாஷ் தமது வீட்டின் அருகே ஆட்டோவின் நிறுத்தி வைத்து விட்டு குலதெய்வ கோயிலுக்கு சென்று விட்டு திரும்பி வந்த நிலையில் அங்கு ஆட்டோ இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தனது ஆட்டோ திருடு போனதை அறிந்த பிரகாஷ் போடிநாயக்கனூர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஒரே பகுதியில் ஒரே வாரத்திற்குள் இரண்டு ஆட்டக்கோள் திருடு போனதை அறிந்து காவல்துறையினர் விசாரணையை தீவிர படுத்தியதில் சிசிடிவி காட்சி பதிவுகளைக் கொண்டு போடிநாயக்கனூர் அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சார்ந்த வசந்தகுமார், தேனி அருகே உள்ள அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த சௌகத் அலி
தேனியைச் சார்ந்த மாரிசாமி, மற்றும் மணிகண்டன் ஆண்டிபட்டியைச் சேர்ந்த சண்முகராஜா ஆகிய ஐந்து நபர்களும் இப்பகுதியில் ஆட்டோவை திருடி சென்றது கண்டறியப்பட்டு காவல்துறையினர் ஐந்து நபர்களின் கைது செய்தனர்

CATEGORIES
TAGS