தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்திரிகையாளர் சந்திப்பு.
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்திரிகையாளர் சந்திப்பு.
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்ரே பிரவீன் உமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா குமணந்தொழு பகுதியை சேர்ந்த குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரியான கீரிபட்டி முருகன் மற்றும் அவரது உறவினர்களின் 22 லட்ச ரூபாய் மதிப்பிலான அசையும், அசையா சொத்துக்கள் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களின் சொத்துக்கள் முடக்கப்படும்.
தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் 647 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் 40 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதே போல தேனி மாவட்டத்தில் கூரியர் மூலம் விற்கப்படும் கஞ்சா விற்பனையை தடுக்க அவ்வபோது கொரியர் சர்வீஸ் மையங்களில் மோப்பநாயின் மூலம் திடீர் ஆய்வுகள் நடத்தபடும்.
போதை மாத்திரைக்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுக்க தனிப்படை அமைத்து மருந்தகங்களில் ஆய்வுகள் நடத்தபட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
தேனி மாவட்ட காவல் துறை சார்பில் கஞ்சா வியாபாரத்தை ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகள், உறவினர்களின் வங்கி கணிக்குகள் குற்றச் செயலில் சம்மந்தப்பட்டிருப்பின் அவைகளும் முடக்கப்பட்டு வருகிறது.
தொடர் குற்றச்செயலில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர்.
இவ்வாறு மாவட்ட எஸ்.பி. பிரவின் உமேஷ் டோங்கரே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.