தேனி ரயில் நிலையத்தில் ரயில் மறியல் செய்ய முயன்ற 300-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது.

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி பறிப்பை கண்டித்து தேனியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் முருகேசன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் பிற அமைப்புகளைச் சேர்ந்த தொண்டர்கள் நிர்வாகிகள் என 300-க்கும் மேற்பட்டோர் கைது.
முன்னதாக தேனி ரயில் நிலையத்தில், மதுரை கிளம்புவதற்காக நின்றிருந்த ரயில் முன் அமர்ந்து மத்திய அரசை கண்டித்தும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
CATEGORIES அரசியல்
TAGS அகில இந்திய காங்கிரஸ் கட்சிஇந்திய காங்கிரஸ் கட்சிகாங்கிரஸ் கட்சியினர் மறியல் போராட்டம்தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிதேனி