BREAKING NEWS

தேனி வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ,மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா திருத்தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.

தேனி வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ,மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா திருத்தேரை வடம் பிடித்து  தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.

தேனி மாவட்டம் வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 7 ஆம் தேதி தொடங்கி வருகின்ற மே 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழாவில் பக்தர்கள் தீச்சட்டி, காவடி, ஆயிரங்கண் பானை, பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல் என தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.

மேலும் மலர் விமானம், முத்துப் பல்லக்கு, பூப்பல்லக்கு என நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்புரிந்தார். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக திருத்தேரில் எழுந்தருளிய ஸ்ரீ கௌமாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா பங்கேற்று திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைக்க, பக்தர்கள் கர கோசத்துடன் இழுத்துச் சென்றனர். நான்கு நாட்கள் நடைபெறும் தேரோட்டத்தின் முதல் நாளான இன்று நிலையில் இருந்து பக்தர்களால் இழுத்து வரப்பட்ட தேர் கிழக்கு கோபுர வாயிலில் அம்மன் சன்னதி முன்பாக நிறுத்தப்பட்டது. நாளை மற்றும் மறுநாள் கோயிலின் தெற்கு வாயில் மற்றும் மேற்கு வாயில் வழியாக சுற்றி வரும் திருத்தேர் வரும் 13 ஆம் தேதி நிலைக்கு வந்தடையும். நான்கு நாட்களுக்கு திருத்தேரில் இருந்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அம்மனுக்கு 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று ஊர் பொங்கல் வைத்து வழிபட்ட பின்னர் திருவிழா நிறைவுபெறும்.

இந்த தேரோட்டத்தில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தேரோட்டத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீகௌமாரி அம்மனை பக்தர்கள் மனம் உருகி வழிபட்டனர்.

CATEGORIES
TAGS