தேர்தல் கண்காணிப்பு நிலைக்குழுவினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 1,47,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது
கோபிசெட்டிபாளையம் கொளப்பலூர் சோதனைசாவடி அருகே ராபர்ட் ரவிக்குமார் தலைமையிலான நிலைக்கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்,
அப்போது அந்த வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, பெருந்துறை கருமாண்டிசெல்லிபாளையம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் பெருந்துறையில் இருந்து கோபி வரை உள்ள கடைகளுக்கு திண்பண்டங்கள் சப்ளை செய்துவிட்டு அதில் வசூலான ரூ.79,600 பணத்தை தனது வாகனத்தில் வைத்திருந்திருந்துள்ளர்
அதே போல கொளப்பலூர் சோதனைசாவடி அருகே வாகன சோதணையில் ஈடுபட்டிருந்தபோது அந்தவழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை சோதணை செய்ததில் திருப்பூர் காட்டுவலவு பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவர் திருப்பூரில் இருந்து கோபி வரை உள்ள கடைகளுக்கு பாமாயில் சப்ளை செய்துவிட்டு அதில் வசூலான ரூ.67,400 பணத்தை வைத்திருந்திருந்துள்ளர்
அடுத்தடுத்து நடத்தப்பட்ட வாகன சோதனையில் ஆறுமுகம்,மற்றும் உதயகுமார் ஆகியோர் வைத்திருந்த ரூ.1,47,00 பணத்திற்க்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த கண்காணிப்பு நிலைக்குழுவினர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.