BREAKING NEWS

தேர்தல் முடிந்ததும் முறிந்தது கூட்டணி தர்மம் தேமுதிக ஒன்றிய செயலாளர் தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர் கரூரில் பரபரப்பு .

தேர்தல் முடிந்ததும் முறிந்தது கூட்டணி தர்மம் தேமுதிக ஒன்றிய செயலாளர் தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர் கரூரில் பரபரப்பு .

 

 

கரூர் மாவட்டம் கடவூர் தேமுதிக தெற்கு ஒன்றிய செயலாளர் ஆகவும் முன்னாள் கவுன்சிலருமான ஆல்வின் என்பவர் காலை 10:00 மணி அளவில் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தன் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருக்கையில் அவ்வழியே வந்த அதிமுகவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேண்டுமென்றே ஆல்வின் இடம் வாய் தகராறு செய்துள்ளார் இதற்கு ஆல்வின் சாதாரணமாக பதில் அளித்ததை எடுத்து ஏற்கனவே தேர்தல் பணப்பட்டுவடாவில் ஏற்பட்ட வகையில் அதிமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ரமேஷ் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து காவல் நிலையம் அருகில் கொலை செய்யும் நோக்கோடு ரமேஷ் ஆல்வினை தாக்கி உள்ளார்.

இதனால் படுகாயம் அடைந்த ஆல்வின் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் இது குறித்து பாதிக்கப்பட்ட ஆல்வின் கூறுகையில் கொலவெறி தாக்குதல் நடத்திய அதிமுக கவுன்சிலர் ரமேஷை மாவட்ட காவல்துறை கைது செய்திட வேண்டும் அவரை குண்டர் சட்டத்தில் அடைத்திட வேண்டும் எனவும் அதிமுக தேமுதிக கூட்டணி கட்சியினர் தேர்தல் முடிந்ததும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இதனால் தான் பெரும் அளவில் மன உளைச்சல் அடைந்ததாகவும் இதற்கு அதிமுக தலைமை பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிந்ததும் கூட்டணி முடிந்தது போல அதிமுகவினர் தங்கள் வேலையை காட்ட துவங்க உள்ளனர் என பாதிக்கப்பட்டவர் உடன் வந்த தேமுதிக நிர்வாகிகள் வேதனையுடன் புலம்பினர்.

Share this…

CATEGORIES
TAGS