தேர்தல் விதிமுறைகளை மீறி சர்வதேச உலக பெண்கள் தின நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு அமைச்சர்கள் வெளியேற்றம்
தேர்தல் விதிமுறைகளை மீறி தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் வாரியம் சார்பில் நடைபெற்ற சர்வதேச உலக பெண்கள் தினத்தில் கலந்து கொண்ட அமைச்சர் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றம். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் பறக்கும் படையினர் நடவடிக்கை.
திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் தமிழக கட்டிட தொழிலாளர்கள் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது விழாவில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் என கலந்து கொண்டு நிகழ்ச்சியில் கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்.குமார் கலந்து கொண்டனர் இதை அடுத்து மேடையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது சற்று நேரத்தில் நிகழ்ச்சிக்கு வருகை தந்த கைத்தறி மற்றும் துணி நூல் துறை காந்தி. திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன். திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி ராஜேந்திரன். மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு தமிழ் தாய் வாழ்த்து பாடல் பாடி முடிக்கப்பட்டு 20 நிமிடங்களுக்கு பின்பு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வாசுதேவன் மற்றும் பறக்கும் படையினர் தேர்தல் விதிமுறைகளை மீறி நிகழ்ச்சி நடத்துவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியதை தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சரிடம் தெரிவித்ததை தொடர்ந்து நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டு அமைச்சர் காந்தி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டு. பொதுமக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் மண்டபத்திற்கு வெளியேயும் சாலை ஓரத்திலும் வைக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டு கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டது மேலும் தேர்தல் அறிவித்த பிறகு தேர்தல் விதிமுறைகளை மீறி மகளிர் தின விழா நடத்தியதும் அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டது அதிகாரிகள் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.