தேவேந்திர குல வேளாளர்களின் மள்ளரிய பேராசான் என்றழைக்கபடும் டாக்டர் குருசாமி சித்தருக்கு கோவை பேருர் பகுதியில் புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
தேவேந்திர குல வேளாளர்களின் மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டெடுத்த மல்லரிய பேராசான் அழைக்கப்படும் டாக்டர் குருசாமிசித்தர், வீரமும், பெருமையும், பண்பாடும், கலாச்சாரமும், மிகுந்த இந்திரனை வணங்கும் மருதநல மக்களான தேவேந்திரர்கள் பட்டியல் இன சாதியில் இருப்பதால்தான் இழிவுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள், இச்சமுகம் பட்டியலின சாதியில் இருந்து வெளியேறினால் தான் இவர்களுக்கான உயர்வும், பெருமையும் கிடைக்கும் என்று தமிழகத்தில் போராடியவர், இவர் கடந்த மாதம் 15ம் தேதி அன்று உயிர் நீத்தார்.
இவரது சமூக பணியை போற்றும் விதமாக கோவை பேரூர் பகுதியில் இவருக்கு புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன், மற்றும் மதுரை தேவேந்திர தன்னார்வ அறக்கட்டளை சேர்ந்த தங்கராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டு டாக்டர் குருசாமி திருவுருவ படத்திற்க்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும் இந்த நிகழ்வில் அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் புஸ்பாணந்தம், தஞ்சை ஜெயராமன், தஞ்சை குணா, கரூர் பரணிதரன், ரஞ்சித் குமார், கனகு, பால்சாமி, அவினாசி சேகர், சந்திரன், சுப்பு, மாணிக்கதுள்ளர் மகேந்திரன், தீபம் அறக்கட்டளை முனியப்பன், கலாமணி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் விழா ஏற்பாடுகளை இந்திரன் இதழ் ஆசிரியர் உலகநாதன் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.