BREAKING NEWS

தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் போலி இருப்பிட சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 3 பெண் காவலர்கள்

அரக்கோணம் மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் ( சிஐஎஸ்எப்) போலி இருப்பிட சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 3 பெண் காவலர்கள் மீது தக்கோலம் போலீசில் புகார் தரப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை மையம் இயங்கி வருகிறது. இங்கு உதவி ஆய்வாளர்கள், கான்ஸ்டபிள் ஆகியோருக்கு 9 மாத காலம் பயிற்சி தரப்படுகிறது . இங்கு பல்வேறு மாநிலத்தவர்கள் பயிற்சி பெறுகின்றனர்.
பயிற்சியை நிறைவு செய்தவர்கள் புராதான சின்னங்கள், விமான நிலையங்கள், வங்கிகள், அணுமின் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 15ம் தேதியிலிருந்து அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜெபாபிரவீன் ( 2 7 ) , லக்கி யாதவ் (25), சுகினி யாதவ் (24) ஆகியோர் காவலர்களாக பயிற்சி பெற்று வந்தனர்.

இவர்களது அனைத்து சான்றிதழ்களும் உண்மைத்தன்மைக்கு அசாம் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கு மேற்கண்ட 3 பெண் காவலர்களும் கொடுத்த இருப்பிட சான்றிதழ் போலியானது என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து தக்கோலம் பயிற்சி மைய காவல் ஆய்வாளர் சிவபத்மா தக்கோலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் .
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் இதுநாள் வரை காவலர்கள் போலி ஜாதி சான்றிதழ், போலி பணி நியமன ஆணை கொடுத்து வந்தனர் . இப்போது போலியான இருப்பிட சான்றிதழ் கொடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.https://youtu.be/Qp1sKDyjahE

Share this…

CATEGORIES
TAGS