BREAKING NEWS

நகைச்சுவை நடிகர் யோகிபாபு அவரது மனைவி மஞ்சு பார்கவியுடன் வளசரவாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் வாக்கு செலுத்தினார்.

மக்களுக்கு ஒரு நல்ல தலைவர் வேண்டும் அனைவரும் ஓட்டு போட்டு நாட்டை காக்க வேண்டும் நடிகர் யோகிபாபு பேட்டி

 

17 வது நாடாளுமன்ற தேர்தல் காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து தரப்பினரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிவருகின்றனர். அந்த வகையில் தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் யோகி பாபு அவரது மனைவி மஞ்சு பார்கவியுடன் சென்று வாக்கு செலுத்தினார்.வளசரவாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கு வந்த இருவரும் வாக்கு செலுத்தினார்.முன்னதாக செய்தியாளர்கள் பொறுமையாக வர கூறியதை அடுத்து இவ்வளவு பொருமையாக சென்றால் மாலை தான் வாக்கு செலுத்த வேண்டும் போல என நகைச்சுவை செய்தார்.இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் மக்களுக்கு நல்ல தலைவர் வேண்டும் இதற்காக அனைவரும் வாக்கு செலுத்த வேண்டும் நாட்டை காக்க வேண்டும் என்றார்.

Share this…

CATEGORIES
TAGS