நக்கம்பாடி தில்லை மாகாளியம்மன் திருக்கோயில் தீமிதி திருவிழா விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா நக்கம்பாடி ஸ்ரீ தில்லை மாகாளியம்மன் திருக்கோயில் தீமிதி திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது கடந்த எட்டாம் தேதி காப்பு கட்டுதலுடன் தினமும் இரவு மாகாளியம்மன் வீதியுலா காட்சி நடைபெற்றுவந்தது இன்று ஸ்ரீகண்டபுரம் குளத்துக்கரையில் இருந்து வானவேடிக்கை மேளதாள வாத்தியங்கள் முழங்க சக்தி கரகம் அலங்கார காவடிகள் புறப்பட்டு ஊர்வலமாக கோவிலை வந்து அடைந்தது பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் இறங்கி தீ மிதித்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை மாகாளியம்மனுக்கு செலுத்தினர் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில் பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.
CATEGORIES மயிலாடுதுறை