நடிகர் விவேக் நினைவாக கோவையில் உருவாகிறது `பி ஹேப்பி’ வன பூங்கா!

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் நினைவாக கோவையில் ‘பி ஹேப்பி’ என்ற பெயரில் வன பூங்கா அமைக்கப்படுகிறது.
மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவாக, கோவை பச்சாபாளையத்தில், ‘சிறுதுளி’ அமைப்பு சார்பில் எஸ்.பி.பி. வனம் உருவாக்கப்பட்டது. இந்த வனத்தை ஏற்கெனவே நடிகர் விவேக் தொடங்கி வைத்தார். இந்நிலையில், விவேக் மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது நினைவாக ‘பி ஹேப்பி’ என்ற பெயரில் ஒரு ஏக்கரில் மேலும் ஒரு வனப்பூங்காவை அமைக்க ‘சிறுதுளி’ அமைப்பு திட்டமிட்டுள்ளது.
CATEGORIES Uncategorized
TAGS சினிமா
