நத்தம் சிறுகுடி அருகே அனைமலைப் பட்டியில் கால்நடை மருத்துவ முகாம் சிறந்த கிடேரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சிறுகுடி அருகே அனைமலைப் பட்டியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
திண்டுக்கல் கோட்ட உதவி இயக்குநர் திருவள்ளுவன் அறிவுரையின் பேரில் நடந்த முகாமிற்கு சிறுகுடி கால்நடை மருந்தக உதவி மருத்துவர் குமரேசன் தலைமையில் உதவி மருத்துவர்கள் செந்துறை இந்து, குட்டுப்பட்டி பிரேமாவதி, ஆய்வாளர் வெங்கடேஸ்வரி, பராமரிப்பு உதவியாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை மேற்கொண்டனர்.
இதில் சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம், தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் சுமார் 200 க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு வழங்கப்பட்டது. சிறந்த கிடேரி கன்றுகள் வளர்த்த விவசாயிகளுக்கு பரிசுகளை சிறுகுடி ஊராட்சித் தலைவர் கோகுலவாணி வீரராகவன் வழங்கினார்கள்.
CATEGORIES திண்டுக்கல்
TAGS அனைமலைப் பட்டிகால்நடை சுகாதாரம் விழிப்புணர்வு முகாம்கால்நடை பராமரிப்பு துறைதிண்டுக்கல் மாவட்டம்நத்தம்