BREAKING NEWS

நயன்தாரா நடித்துள்ள ’ஓ 2’ படத்தின் டீஸர் இன்று வெளியாகியுள்ளது.

நயன்தாரா நடித்துள்ள ’ஓ 2’ படத்தின் டீஸர் இன்று வெளியாகியுள்ளது.

`அமைதியா இருந்தா 12 மணி நேரம் உயிரோட இருக்கலாம்’: மிரட்டும் நயன்தாரா பட டீஸர்

நயன்தாரா, தற்போது ‘ஓ 2’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஜி.கே. விக்னேஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தை டீரிம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் விரைவில் வெளியாக உள்ளது.

விபத்தில் சிக்கும் பேருந்து ஒன்றில், 8 வயது மகனுடன் மாட்டிக்கொள்கிறார் நயன்தாரா. நுரையீரல் பிரச்சினைக்காக மகனிடம் இருக்கும் ஆக்சிஜன் சிலிண்டரை பேருந்தில் சக பயணிகள் குறிவைக்கிறார்கள். தன் மகனை அவர்களிடமிருந்து அவர் எவ்வாறு காப்பாற்றுகிறார் என்பதைப் பரபரப்பாகச் சொல்லும் படம் இது.

தமிழ்நாடு, கேரளா இணையும் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் பார்வதி என்ற அம்மா கேரக்டரில் நயன்தாரா நடித்துள்ளார். அவர் மகனாக ரித்விக் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீஸர் இன்று வெளியாகியுள்ளது. மிரட்டும் வகையில் த்ரில்லாக இருக்கும் இந்த டீஸர் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

 

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )