BREAKING NEWS

நல்லாடையில் விபத்தில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் தொழிலதிபர் டாக்டர் ராமதாஸ் சகோதரர்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்ட ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சர் மெய்யநாதன் துவங்கி வைத்தார். தேனிசை தென்றல் தேவாவின் இன்னிசை கச்சேரி கிராமமக்களை கவர்ந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா நல்லாடை கிராமத்தை சேர்ந்த சிசேல் தொழிலதிபர் டாக்டர் ராமதாஸ் சகோதரர்கள் சமூக நல அறக்கட்டளை உருவாக்கி அதன்மூலம் பல்வேறு நலதிட்டங்களை செய்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக நல்லாடை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த கிராமப்புற ஏழை எளிய மக்கள் அவசர நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காமல் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் அறக்கட்டளை சார்பாக ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆம்புலன்ஸ் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளாராக சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு சிசேல் தொழிலதிபர் டாக்டர் ராமதாஸ் சேவையை பாராட்டி வாழ்த்துரை வழங்கி ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, பூம்புகார் எம்.எல்.ஏ.நிவேதாமுருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS