நவம்பர் 1ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் பிச்சை எடுக்கும் போராட்டம்.

விருதுநகர் தென்காசி கடலூர் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் 2020/21இந்த ஆண்டு பயிர் காப்பீட்டில் பல குளறுபடிகள் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் விளையாடிய புள்ளியல் துறை வேளாண்மை துறை மற்றும்,
மாவட்ட நிர்வாகங்கள் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் இந்த மாவட்ட விவசாயிகளின் பயிர் காப்பீட்டில் பெரிய குழப்படிகள் செய்து இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டது
தமிழக அரசின்விவசாயிகளுக்கு உண்டான செயல்பாடுகள் விவசாயிகளுக்கு எதிரானதாகவே உள்ளது விவசாயிகளுக்கு நீதிகேட்டு நவம்பர் 1ஆம் தேதி தலைமைச் செயலகம் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்த இன்று 19/1O/2022புதன்கிழமை பகல் 11 .30 மணியளவில் ஆலோசனை கூட்டம் விருதுநகர் தாலுகா மூலிப்பட்டி கிராமத்தில் மாநிலத் தலைவர் OA.நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது
இந்தக் கூட்டத்தில் மாநில பொருளாளர் கவலூர் சுப்பாராஜ் மாவட்டச் செயலாளர் தங்கவேலு செல்லபாண்டியன் கருமுத்து முருகன் கவலூர் கேசவன் சீனிவாசன் மருத நத்தம் மாரிச்சாமி மற்றும் சுற்றுவட்டார கிராம விவசாயிகள் கலந்து கொண்டனர்.
நவம்பர் 1ஆம் தேதி இப்பகுதியில் உள்ள விவசாயிகள் அனைவரும் சென்னைக்கு செல்வதாக ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டது.