நாகப்பாம்பு பிடித்த தீயணைப்பு துறையினர்!

காட்பாடி மெட்டுக்குளம் பகுதியில் வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீளமுள்ள நாகபாம்பை லாவகமாக பிடித்த காட்பாடி தீயணைப்பு துறையினர்
காப்பு காட்டில் விடுவித்தனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த மெட்டுக்குளம் முத்துமாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ஜோசப் என்பவரின் வீட்டில் நேற்று கொடிய விஷமுள்ள 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஒன்று வீட்டிற்குள் புகுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் என்ன செய்வதென்று அறியாமல் உடனடியாக காட்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் நிலைய அலுவலர் முருகேசன் பால்பாண்டி தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் வீட்டிற்குள் புகுந்த நாகப்பாம்பை உயிருடன் பிடித்து அருகில் உள்ள காப்பு காட்டில் விட்டனர்.
CATEGORIES வேலூர்
TAGS மாவட்ட செய்திகள்
