BREAKING NEWS

நாகலூர் ஸ்ரீ விஷமீண்ட மாரியம்மன் ஆலயம் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் ஏராளமானோர் பால்குடம் காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்

நாகலூர் ஸ்ரீ விஷமீண்ட மாரியம்மன் ஆலயம் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் ஏராளமானோர் பால்குடம் காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா, நாகலூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ விஷமீண்ட மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது11 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பால்குடம் காவடி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வெட்டாற்றில் இருந்து 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம். செடில் காவடி. பறவை காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக பக்தி பரவசத்துடன் கோவில் வந்தடைந்தனர் தொடர்ந்து அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள். நடத்தப்பட்டு
மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதில் நாகலூர் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை விழா குழுவினர்.

 

CATEGORIES
TAGS