நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் பணிகள் சூடுபிடிக்க துவங்கியுள்ளன.
அந்த வகையில் இந்தியா கூட்டணி சார்பில் ஈரோட்டில் இந்தியா கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த செயல்வீரர்கள் கூட்டத்திற்கு திமுக மாவட்ட செயலாளர் அமைச்சர் முத்துசாமி தலைமை வகித்தார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் EVKS.இளங்கோவன்,
மதிமுக சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி
மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாசை அமைச்சர் முத்துசாமி அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் அரசியல் தலைவர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்தனர்.