BREAKING NEWS

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மக்களவை தேர்தலையொட்டி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் துணைராணுவ படையினர் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினார்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மக்களவை தேர்தலையொட்டி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் துணைராணுவ படையினர் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினார்

 

மக்களவை தேர்தலையொட்டி பொதுமக்களுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தி வகையிலும் அச்சத்தை போக்கும் வகையிலும் முன்னேற்பாட்டு பணியின் ஒரு பகுதியாக
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ பாதுகாப்பு படை வீரர்கள், போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். இந்த பாதுகாப்பு கொடி அணிவகுப்பினை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் இமயவரம்பன் தொடங்கி வைத்தார்.

இப்பேரணியானது. குமாரபாளையம் அருகே உள்ள காவேரிநகர் பகுதியில் தொடங்கி பேருந்து நிலையம், சி.என்.பாளையம். சந்தைப்பேட்டை, சேலம் முதன்மை சாலை வழியாக குளத்துகாடு பகுதியில் கொடி அணிவகுப்பு நிறைவடைந்தது.

இதில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக இத்தகைய கொடி அணி வகுப்பை நடத்தி வருகிறோம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இப்பேரணியில் குமாரபாளையம். பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் போலீசார் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS