நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் நூற்றுக்கு மேற்பட்ட மனுக்கள் வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி அவர்களிடம் பொதுமக்கள் வழங்கினர்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் கிராமப் பகுதி மக்கள் தங்கள் கோரிக்கையை மனுக்களை வழங்கினர்.
திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் நில உரிமைகளில் உள்ள பெயர் திருத்தங்கள் கணினி பெயர் திருத்தங்கள் முதியோர் ஓய்வூதியத் தொகை இலவச வீட்டு மனை பட்டாக்கள் கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் மனுக்கள் வழங்கினர்.
இவற்றைப் பெற்றுக் கொண்ட வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி இரண்டு இடங்களில் தீர்வு காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கிராம மக்களுக்கு உறுதி அளித்தார்