நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தை மேற்கொண்டனர்
தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது இதன் ஒரு பகுதியாக பள்ளிபாளையம் காகித ஆளை சாலையில் மனித சங்கிலி இயக்கமானது பள்ளிபாளையம் நகர அதிமுக சார்பில் செயலாளர் பி.எஸ்.வெள்ளியங்கிரி தலைமையில் நடைபெற்றது. தமிழகம் போதைப் பொருள்களின் கேந்திரமாக மாறி வருவதற்கும் தமிழ்நாட்டில் போதை பொருள் கடத்தல் அதிகரித்துள்ளதற்கும் தமிழக அரசை கண்டித்து நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் ஆண்களும் பெண்களும் நீண்ட தொலைதூரங்களுக்கு கைகளை கோர்த்தபடி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் திமுக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர் நடைபெற்றது. அம்மா பேரவை செயலாளர் டி.கே.சுப்பிரமணியம் ,அதிமுக நகரத் துணைச் செயலாளர் ஜெய் கணேஷ் ,மற்றும் ஏராளமான அதிமுகவினர் தமிழக அரசை கண்டித்து , போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும் உரிய நடவடிக்கை எடுக்காத திமுக அரசை பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுகவினர் கோஷங்களை எழுப்பினர்.
ஆலாம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட வசந்த நகர் பகுதியில் இருந்து காவேரி ஆர் எஸ் சாலை வரை ஆலாம்பாளையம் பேரூர் கழகம் சார்பில் மனித சங்கிலி இயக்க போராட்டம் திமுக அரசை கண்டித்து நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளிபாளையம் அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சேர்மன் செந்தில் தலைமை தாங்கினார். மேலும் ஆலம்பாளையம் பேரூர் கழக செயலாளர் செல்லதுரை, துணைச் செயலாளர் சுரேஷ் மற்றும் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த அதிமுகவினர், மகளிர் அணியினர், ஐடி விங் பிரிவினர் என பலரும் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியபடி கண்டன கோஷங்களை எழுப்பினர். பள்ளிபாளையத்தில் இரண்டு இடங்களில் நடைபெற்ற இந்த மனித சங்கிலி இயக்க போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..