நிலக்கோட்டை அருகே தேனீக்கள் கொட்டி 3 பேர் உட்பட, பசுமாடு படுகாயம்

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா.
நிலக்கோட்டை அருகே கரியாம்பட்டியை சேர்ந்தவர்கள் சின்னகாளை, பாப்பு, பாண்டியம்மாள் (45). இவர்கள் 3 பேரும் தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்குள்ள ஒரு மரத்தில் இருந்து கலைந்து வந்த தேனீக்கள் அவர்களை கொட்டின.
இதில் படுகாயமடைந்த அவர்களை தீயணைப்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக 3 பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் தேனீக்கள் கொட்டியதில் அங்கு மேய்ச்சலுக்காக விடப்பட்ட பசுமாடும் காயமடைந்தது.
பசு மாடு வை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர் பின்னர் பசுமாட்டுக்கு கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
CATEGORIES திண்டுக்கல்
TAGS தமிழ்நாடு