BREAKING NEWS

நீலகிரியில் தேயிலைக்கு குறைந்தபட்ச நிர்ணய விலை 33 ரூபாய் நிர்ணயிக்க வேண்டி உண்ணாவிரத போராட்டம்.

நீலகிரியில் தேயிலைக்கு குறைந்தபட்ச நிர்ணய விலை 33 ரூபாய் நிர்ணயிக்க வேண்டி உண்ணாவிரத போராட்டம்.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு குறைந்தபட்ச நிர்ணய விலை 33 ரூபாய் நிர்ணயிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீலகிரி மாவட்டத்தில் உள்ள 80 ஆயிரம் சிறு, குறு தேயிலை விவசாயிகள் தேயிலை பறிக்கும் பணிக்கு செல்லாமல் இன்று காலை முதல் தொடர் வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர், கோத்தகிரி அருகேயுள்ள நெட்டக்கல் கிராமத்தில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் முதுகெலும்பாக திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் தேயிலை விவசாயத்தில் சுமார் 65 முதல் 80 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு கிலோவுக்கு ரூ.14 வரை மட்டுமே கொள்முதல் விலை வழங்கப்படுகிறது. உற்பத்தி செலவை கணக்கிடும்போது இது கட்டுப்படி ஆகாதால் தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளுக்கு பல்வேறு கோரிக்கை மனுக்களை தேயிலை விவசாயிகள் கொடுத்துள்ளனர்.

ஆனால் பசுந்தேயிலை விலை உயர்வுக்கு எவ்வித நடவடிக்கையும் எட்டப்படாததால் தேயிலைக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என இன்று நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோர் நெட்டக்கல் கிராமத்தில் தொடர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்போராட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் பசுந்தேயிலை ஒரு கிலோ உற்பத்தி செய்ய 20 ரூபாய் செலவாகும் நிலையில் தற்போது 14 ரூபாய் மட்டுமே வழங்கபடுகிறது, இதனால் தேயிலை விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

இதனையடுத்து M.S.சாமி நாதன் கமிட்டி பரிந்துரை மற்றும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு ஆகியவற்றின் உத்தரவின் படி கிலோவிற்கு 33 ரூபாய் விலை நிர்ணயம் செய்ய கோரி இன்று காலை முதல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொதநாடு,மேற்குசீமை,பொரங்காடு ச்மை ஆகிய சீமைகளில் சுமார் 600-க்கும் மேற்பட்டோர் நெட்டக்கல்,இத்தலார்,கக்குச்சி ஆகிய மலை கிராமங்களில் தேயிலை விவசாயிகள் தேயிலை பறிக்கும் பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

மத்திய அரசும், மாநில அரசுகளும் விலை நிர்ணயம் செய்யும் வரை போராட்டம் என நாக்குபெட்டா தேயிலை நல சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.சிறு, குறு தேயிலை விவசாயிகளின் வேலை நிறுத்த காரணமாக தேயிலை உற்பத்தி பாதிக்கபட்டுள்ளது.

CATEGORIES
TAGS