BREAKING NEWS

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூன்றடுக்கு பாதுகாப்புடன் 173 கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் மு.அருணா செய்தியாளர்களிடம் பேட்டி.

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூன்றடுக்கு பாதுகாப்புடன் 173 கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் மு.அருணா செய்தியாளர்களிடம் பேட்டி.

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூன்றடுக்கு பாதுகாப்புடன் 173 கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் மு.அருணா செய்தியாளர்களிடம் பேட்டி .

அதிக வெப்பம் காரணமாக நேற்று இரவு 6.17 முதல் 6.43 வரை சிசிடி கேமராக்கள் செயலிழந்தது என விளக்கம் .

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் 19ம் தேதி நடைபெற்று முடிந்த தேர்தலில் பதிவான வாக்கு இயந்திரங்கள் உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் துணை ராணுவ படை, சிறப்பு ஆயுதப்படையினர்,
துப்பாக்கி எந்திய உள்ளூர் காவலர்கள் என மூன்று அடுக்கு பாதுகாப்பு மற்றும் 173 கண்காணிப்பு கேமரா மூலம் வாக்கு இயந்திரங்கள் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை 6.17 முதல் 6.43 வரை 173 கண்காணிப்பு கேமராக்கள் செயல் இழந்தது . தொழில்நுட்ப பிரச்சனை உடனடியாக சரி செய்யப்பட்டு தற்போது ,கேமராக்கள் முறையாக இயங்கி வரும் நிலையில் இது குறித்து மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரமான மு.அருணா உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர்
அரசு பாலிடெக்னிக் வளகத்திற்க்குள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறைகளில் வெப்பம் காரணமாக நேற்று மாலை 6.17 முதல் 6.43 வரை 173 கண்காணிப்பு கேமராக்கள் செயல் இழந்ததாகவும். 20 நிமிடத்தில் தொழில்நுட்ப வல்லுநர்கள் அதனை சரி செய்து தற்போது கேமராவில் உள்ள பகுதியில் ஏர்கூலர்கள் அமைக்கப்பட்டு, சீராக இயங்கி வருவதாக மாவட்ட ஆட்சியர் மு.அருணா கூறினார்.

இந்திய தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி சம்பந்தப்பட்ட வேட்பாளர்களோ, வேட்பாளர்களின் ஒரு பிரதிநிதியோ இந்திய தேர்தல் ஆணைய விதிகளின்படி வாக்குப்பதிவு இயந்திரங்கள் முடி முத்திரையிடப்பட்டுள்ள ( Strong room ) வைக்கப்பட்டுள்ள, அறையை பார்வையிட அனுமதி வழங்கப்படும் என தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்தார்.

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி தேர்தல் அலுவலர் தினந்தோறும் முற்பகல் மற்றும் பிற்பகல் நேரங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அறையில் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் தினம் தோறும் கண்காணித்து வருவதாக கூறினார். தற்போது முதல் உள் அடுக்கு பாதுகாப்பில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும், இரண்டாம் அடுக்கில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும், மூன்றாம் அடுக்கில் தமிழ்நாடு காவல்துறை மற்றும் ஆயுதப்படையினரும் பாதுகாப்பு பணியில் என 182 காவல்துறையினர் 24 மணி நேரமும் பாதுகாக்கப்பட்ட பணியை மேற்கொண்டு வருவதாக கூறினார்.

 

Share this…

CATEGORIES
TAGS