BREAKING NEWS

நீலகிரி மலை ரயில் தொடங்கி 125 ஆண்டுகள் …. இதை கொண்டாடும் வகையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வந்த மலை ரயிலுக்கு ரயில்வே நிர்வாகம் மற்றும் நீலகிரி நீராவி ரத அறக்கட்டளையினர் உற்சாக வரவேற்பளித்தனர் .

நீலகிரி மலை ரயில் தொடங்கி 125 ஆண்டுகள் …. இதை கொண்டாடும் வகையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வந்த மலை ரயிலுக்கு ரயில்வே நிர்வாகம் மற்றும் நீலகிரி நீராவி ரத அறக்கட்டளையினர் உற்சாக வரவேற்பளித்தனர் .

 

நீலகிரி மலை ரயில் தொடங்கி 125 ஆண்டுகள் ..இதை கொண்டாடும் வகையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வந்த மலை ரயிலுக்கு ரயில்வே நிர்வாகம் மற்றும் நீலகிரி நீராவி ரத அறக்கட்டளையினர் உற்சாக வரவேற்பளித்தனர் .

ரயில் நிலையத்தில் கேக் வெட்டி 125 வது ஆண்டு மலைரயில் தினம் கொண்டாடப்பட்டது சுற்றுலா பயணிகளுக்கு இனிப்பு கேக் வழங்கி வரவேற்பளிக்கப்பட்டது .
1899 ம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் மலை ரயில் முதன்முறையாக தொடங்கப்பட்டது இன்று அதன் 125 வது ஆண்டு ஆனதை கொண்டாடும் வகையில் குன்னூர் ரயில் நிலையத்தில் மலை ரயிலுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது மலைகளின் தவழ்ந்து வந்த மலை ரயில் அலங்கரிக்கப்பட்டு ரயில் நிலையம் வந்தடைந்தது .

பின்பு ரயில் நிலையத்தில் கேக் வெட்டி 125 ஆவது ஆண்டு மலை ரயில் தினம் கொண்டாடப்பட்டது ரயிலில் பயணம் செய்து வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்புகள் மற்றும் கேக் கொடுத்து வரவேற்பளிக்கப்பட்டது .

மலை ரயிலில் பயணம் செய்து வந்த சுற்றுலாப் பயணிகள் இதுவரை இது போன்ற பயணத்தை தாங்கள் கண்டதில்லை என உற்சாகத்துடன் தெரிவித்தனர் குறிப்பாக மேட்டுப்பாளையத்தில் இருந்து மலைகளின் வழியே வரும்பொழுது குகைகள், இயற்கை காட்சிகள், அருவிகள், பாலங்கள் என அனைத்தையும் பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருந்தது என தெரிவித்தனர் ஒரு மாதத்திற்கு முன்பே மலை ரயில் பயணிக்க முன்பதிவு செய்து இன்று தாங்கள் வந்ததாகவும் இன்று 125 வது ஆண்டு மலை ரயில் தினம் என்பதும் இந்த நாளில் மலை ரயிலில் பயணித்தது தங்களுக்கு மறக்க முடியாத அனுபவம் என தெரிவித்தனர் .

 

CATEGORIES
TAGS