நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமீம் அறக்கட்டளையின் சார்பில் தமீம் மற்றும் அவரது நண்பர் ஜஸ்டின் ஆகியோரது நினைவாக முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி..

நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமீம் அறக்கட்டளையின் சார்பில் தமீம் மற்றும் அவரது நண்பர் ஜஸ்டின் ஆகியோரது நினைவாக முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி உதகையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் 200 பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் மாபெரும் ரத்த தான முகாம் நடைபெற்றது இந்த விழாவில் நீலகிரி மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி பிரவீனா தேவி தலைமை தாங்கி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி ரத்ததான முகாமினை துவக்கி வைத்தார்
இந்த நிகழ்ச்சியில் மும்மத தலைவர்களாக அலி இமாம் திருஞானசம்பந்த சிவாச்சாரியார் அருட்தந்தை கிறிஸ்டோபர் லாரன்ஸ் அருட்தந்தை ரவிராஜ் உட்பட சமூக ஆர்வலர்கள் தன்னார்வலர்கள் தமீம் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் பொதுமக்கள் என்று அனைவரும் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்ற ரத்த தான முகாமிற்கு உதகை அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர்கள் ஹரிணி பிரான்சிக்கா தலைமையிலான குழுவினர் ரத்த சேகரிப்பை மேற்கொண்டனர் .
இந்த ரத்ததான முகாமில் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர் இந்த முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமீம் அறக்கட்டளையின் நிர்வாகிகள் தாஜ் தானிஷ் சையது இப்ராஹிம் உட்பட உறுப்பினர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்து இருந்தனர் முன்னதாக சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.